தரங்கம்பாடி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் , மூதாட்டி ஒருவர் மருத்துவமனை வாயிலில் உடல் நலம் குன்றி படுத்திருந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
தரங்கம்பாடி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் , மூதாட்டி ஒருவர் மருத்துவமனை வாயிலில் உடல் நலம் குன்றி படுத்திருந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார் :-
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் தரங்கம்பாடி வட்ட அளவில் இன்று காலை 9 மணி அளவில் துவங்கியது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தரங்கம்பாடி வட்ட அளவில் இன்று காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையிலும் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மருத்துவமனை வாயிலில் மயங்கிய நிலையில் படுத்து கிடந்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு உடனடியாக அவரை கவனிக்க வேண்டாமா என்று ஆட்சியர் கேள்வி எழுப்பினார். பின்னர் மூதாட்டி மருத்துவமனை உள்ளே சென்று அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூதாட்டியிடம் உடல் நலம் குறித்து ஆட்சியர் கேட்டறிந்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவமனையில் தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இதில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தரங்கம்பாடி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் , மூதாட்டி ஒருவர் மருத்துவமனை வாயிலில் உடல் நலம் குன்றி படுத்திருந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார் :-
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் தரங்கம்பாடி வட்ட அளவில் இன்று காலை 9 மணி அளவில் துவங்கியது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தரங்கம்பாடி வட்ட அளவில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையிலும் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மருத்துவமனை வாயிலில் மயங்கிய நிலையில் படுத்து கிடந்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு உடனடியாக அவரை கவனிக்க வேண்டாமா என்று ஆட்சியர் கேள்வி எழுப்பினார். பின்னர் மூதாட்டி மருத்துவமனை உள்ளே சென்று அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மூதாட்டியிடம் உடல் நலம் குறித்து ஆட்சியர் கேட்டறிந்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனையில் தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இதில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.