தரங்கம்பாடி டென்னிஸ் கோட்டை கடற்கரையில் 69 -வது ஞாயிறு உதயம் யோகா பயிற்சி கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

10 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 2024 மற்றும் 69 வது ஞாயிறு உதயத்தை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே கடற்கரையில் யோகா பயிற்சியாளர் டாக்டர் லெனின் ஜீவா கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி வழங்கினார்.
முன்னதாக பேராசிரியர் முனைவர் செல்வம் அனைவரையும் வரவேற்று தொகுத்து வழங்கினார்.
இதில் பொறையார் டி பி எம் எல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் ஜான்சன் ஜெயக்குமார், டி இ எல் சி தரங்கம்பாடி குருசேரம் மறைதிரு. சபைகுரு.சாம்சங் மோசஸ், தரங்கம்பாடி ரோட்டரி சங்கத் தலைவர் தொழிலதிபர் முனைவர் ஏகே சந்துரு, கட்டிட ஒப்பந்தக்காரர் இளங்கோவன், காரைக்கால் லைட் ஆப் சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர் கார்குழலி உள்ளிட்ட கல்லூரி பள்ளி மாணவர்கள் மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் அமைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.