BREAKING NEWS

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாரதா இவரது கணவர் பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவராக சாரதா தேர்வான பின்பு ஆதிதிராவிடருக்கு சொந்தமான மயான இடத்தை அப்பகுதியின் ஆதிக்கசாதியினரிடமிருந்து(உடையார்) மீட்டு தலித் சமூகத்தினருக்கு பெற்றுத் தந்துள்ளார்.

இதனை பொறுக்காமல் இச்சமூகத்தினர். ஜாதி இந்துக்கள் சுடுகாட்டில் இங்கு உடையார் சமூகத்தை மட்டும் தான் இறுதி சடங்கு நிறைவேற்றனுமா? என்று யாரோ சமூக விரோதிகள் எழுதி சென்றுள்ளனர் இதை அறியாத ஊராட்சி தலைவரின் கணவர் பழனிசாமி குடிநீர் நீர்தேக்க தொட்டியின் மின் மோட்டார் அணைக்க சென்ற போது அங்கே சாதி இந்துக்கள் ஒன்று கூடி இருந்துள்ளனர்.

பிரியதர்ஷன் என்பவர் எங்களது மயான கொட்டகை மதில் சுவரில் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று கேட்டுள்ளார் அதற்கு பழனிசாமி அவ்வாறு எங்கள் பகுதி மக்கள் எழுதிய இருக்க மாட்டார்கள் நான் விசாரித்து கூறுகிறேன். என்று சொன்ன பிறகும் பழனிசாமி யை கட்டை விரலால் கடுமையாக மண்டையில் தாக்கியுள்ளார் சுய நினைவிடத்தில் பழனிசாமி நீண்ட நேரத்திற்கு பின் அப்பகுதியில் வசிக்கும் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேட்டி.

1.சாரதா பழனிசாமி.வல்லம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர்.
2.தமிழன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டம் செயலாளர். பாதிக்கப்பட்ட ஊராட்சி தலைவரின் கணவர் பழனிசாமி யைப் பார்த்து தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் செயலாளர் தமிழன். மேற்கு மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன். நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் வீரன். வெற்றி வேந்தன்.

முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி. சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் சிவா. தமிழ் நீதி. ஒன்றிய செயலாளர் நாகத்தின் வினோத். முன்னாள் மாநகர செயலாளர் தமிழ் முதல்வன். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோக ராஜ். மற்றும் வல்லம் புதூர் விடுதலைச் சிறுத்தைகள். பால்ராஜ். துரைராஜ். செல்வகுமார். அரவிந்குமார். மோகன். தனியரசு. கருப்பசாமி. பிரபு. குலோத்துங்கன். வீரமணி. முத்தமிழ் உள்ளிட்ட திரளான விடுதலைச் சிறுத்தைகள் படுகாயமடைந்த பழனிசாமி யை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS