தலைப்பு செய்திகள்
யானைகள் உலா:சுற்றுலா பயணிகள் உற்சாகம்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட் டெறுமை, செந்நாய் போன்ற அரிய வகை விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்த விலங்கினங்கள் தங்களது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பல கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதியில் நடந்து அமராவதி அணையைத் தேடி வருகின்றன. குறிப்பாக கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாத யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அடர்ந்த காட்டை விட்டு வெளியே வருகின்றன. இந்நிலையில் அமராவதி அணையை நோக்கி வந்த யானைகள் உடுமலை-மூனாறு சாலையில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. இதனால் இந்த வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
