தலைப்பு செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப் பெட்டியினை எடுத்துச் செல்ல தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 142 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கும்பகோணம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு வாக்குப் பெட்டியினை எடுத்துச் செல்ல தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 142 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மொத்தம் நான்கு பேர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மொத்தம் 411 ஊர்க்காவல் படையினர் வாகனத்தில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் 196 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 196 வாக்குப்பதிவு எந்திரங்கள் 15 மண்டலங்களுக்கு என்று அனுப்பி வைக்கப்பட்டதுதஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரை பதற்றமான வாக்குச்சாவடிகள் மொத்த எண்ணிக்கை 38 ஆகும்.
இதில் தஞ்சாவூர் நகர பகுதிகளில் 3 பதட்டமான வாக்குச்சாவடிகள் கும்பகோணம் பகுதிகளில் 4 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பட்டுக்கோட்டை பகுதிகளில் பொது இடங்களில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும் ஒரத்தநாடு பகுதிகளில் 3 வாக்குச்சாவடி பதற்றமான வாக்குச்சாவடிகளும் திருவையாறு பகுதிகளில் 7 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமாகவும் பேராவூரணி பகுதியில் 5 வாக்குச்சாவடி மையங்கள் ப தரமானதாகவும் திருவிடைமருதூர் பகுதிகளில் இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் ப தரமானதாகவும் அய்யம்பெட்டை பகுதிகளில் 4 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் ஆனதாகவும் இருக்கிறது மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 38 இடங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.