BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சட்டப்பேரவையில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் அறிவிப்புக்கு விவசாயிகள் குற்றச்சாட்டு.


விவசாய சங்க பிரதிநிதி ஜீவகுமார் கூறுகையில்..

இரண்டாவது முறையாக தமிழக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதே நாங்கள் வரவேற்கிறோம் அதே போன்று இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் சிறுதானிய உற்பத்தி இளைஞர்களின் திறனை மேம்படுத்த புதிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை ஆனால் முக்கியமான விவசாயிகள் கோரிக்கையான நெல் குவிண்டாலுக்கு ரூ 2,500 ரூபாய் வழங்கப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது இந்த தடவை அதை பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட வில்லை அருகாமையில் உள்ள ஆந்திராவில் ,கேரளாவில், தெலுங்கானாவில் ரயத்பந்த் திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கும் தொகையாக 10ஆயிரம் வழங்குகிறார்கள். தமிழ்நாட்டில் எப்போது அதை அமல்படுத்துவார்கள் என தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது அதேபோன்று கரும்புக்கு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் ஆனால் அதை அறிவிக்கப்படவில்லை அதேபோன்று பயிர் சாகுபடி இன்சூரன்ஸ் திட்டத்திற்க்கின சரியான அறிவிப்பு இல்லை விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்கு ஏக்கருக்கு 40 ரூபாய் கேட்கப்பட்டிருந்தது அதைப் பற்றியும் எந்தவித அறிவிப்பும் இல்லை நான்கு மாதத்தில் திரும்பி கொடுப்பதற்கான விவசாயிகள் கடனை கேட்டிருந்தோம் அதைப்பற்றியும் அறிவிப்பு இல்லை. காத்திருப்போர் பட்டியலில் இலவச மின்சாரம் பற்றி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை அதைவிட மிக அதிர்ச்சியான ஒரு விஷயம் குருவையில் கொண்டுவந்து குறிப்பாக எண்ணெய் வித்துக்கள் பருப்பு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பயிர்களையும் சாகுபடி செய்யலாம் என்பது நெல்லு தான் பிரதானம் அதை மாற்றி விடக்கூடாது என்பதுதான் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் எங்களது குறைகளை அமைச்சர் அவர்கள் தொகுப்பு நிதியில் செய்வார் என எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செந்தில் விவசாய பட்ஜெட் பற்றி கூறுகையில்…

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது வரவேற்கத்தக்க விஷயம் இன்னொரு பக்கம் பார்த்தால் சிறு தானிய உற்பத்திக்கு இயற்கை வேளாண்மைக்கு என எண்ணெய் வித்து உற்பத்திக்கு இது போன்ற பல திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக ஒரு முக்கியத்துவம் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் . நீண்டகாலமாக விவசாயிகள் வைத்திருக்க கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500 விலை கிடைக்கும் என்ற நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை அதேபோன்று கரும்புக்கான 4 ஆயிரம் ரூபாய் விலை அறிவிப்புகள் இல்லை. அதேபோன்று பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான காலநிலை மாற்றம் இந்த பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை எல்லாம் வரவேற்கத்தக்க விஷயம் ஆனால் அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட கூடிய பாதிப்புகள் அதில் இருந்து விவசாயிகளை விடுவிக்கனும் அப்படி சொல்லி சொன்னா
அந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்றால் ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்வதாக அமைய வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிக சொற்பமான தொகை தான் ஒதுக்கப்பட்டுள்ளது எல்லா காலத்திலும் எல்லா பயிர்களுக்கும் பயிர் காப்பீடு என்பது விவசாயிகளை ஊக்குவித்தல் விஷயமாக இருக்கும் . கடந்த நிதியாண்டு அறிக்கைக்கும் இந்த ஆண்டு நிதி அறிக்கை வெறும் 250 கோடி மட்டுமே இந்த பட்ஜெட்டில் உயர்வு என்பது இருக்கிறது இது போதுமானது அல்ல என்ற முறையில் என விவசாயிகள் குற்றச்சாட்டு.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )