தலைப்பு செய்திகள்
தஞ்சையில் 100 ஆண்டுகள் பழமையான தர்கா இடிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இஸ்லாமிய பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமையான பாலங்கள் இடிக்கப்பட்டு அகலப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது இதைப்போல் கரந்தை வடவாறு பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதை ஒட்டி அங்கு இருந்த கோவிலில் முகப்பு பகுதி இடித்து அகற்றப்பட்டது.

இதைப்போல் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருந்து வந்த நாகூர் ஆண்டவர் கால் பதித்த தர்கா பொக்லின் இயந்திரங்கள் கொண்டு முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.

அப்போது தர்கா இடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த முகப்பூபீ என்ற இஸ்லாமிய பெண் மயங்கி ரோட்டிலேயே விழுந்தார் இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
