BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

`மேகேதாட்டுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதம்’

`மேகேதாட்டுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதம்'

“மேகேதாட்டு திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு” என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.

மேகேதாட்டுயில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், திடீரென ரூ.1000 கோடியை ஒதுக்கியது தமிழக அரசியல் கட்சிகளை பதறவைத்தது. அணை கட்டுவதற்கான திட்ட வரைவுகளை மத்திய அரசுக்கு கர்நாடகா அனைத்துக்கட்சி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த செயலை தமிழக விவசாய சங்கங்கள் கண்டித்த‌தோடு, கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் அளிக்கக்கூடாது என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மேகேதாட்டு திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு” என விமர்சித்துள்ளார் முதல்வர் பசவராஜ்.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )