தலைப்பு செய்திகள்
மகப்பேறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் வாக்கு பதிவு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 750 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர் தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 196 வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பொது மக்கள் வாக்களிப்பதற்கு முன் வெப்பமானி பரிசோதனை, முக கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்படுகிறது, தஞ்சாவூரில் 51 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் மகப்பேற்றால் குழந்தை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இதனையடுத்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர் அஞ்சுகம் மருத்துவமனையில் இருந்து சரபோஜி கல்லூரி வாக்குச்சாவடிக்கு தனது கணவருடன் வந்து தனது வாக்கை செலுத்தினார்.
மேலும் திமுக வேட்பாளர் சன் ராமநாதன், அதிமுக வேட்பாளர் சனாதினி உள்ளிட்டோரும் தங்களது பகுதிகளில் வாக்கை செலுத்தினர் இந்நிலையில் தஞ்சாவூரில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து கொண்டு வருகிறது இதனால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இல்லாமல் உள்ளது.