தலைப்பு செய்திகள்
விராலிமலையில் பார்வையற்றோர் மீது மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த பார்வையற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பார்வையற்றோருக்கான உலக ஒளி அறக்கட்டளை சார்பில் மரியதாஸ் தலைமையில் கோவில்பட்டி
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல்நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கரை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு நிவாரண நிதி மற்றும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
