BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு!! கால அவகாசம் நீட்டிக்க முடியாது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க முடியாது. சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆதார் இணைப்பு அவசியம் என்ற காரணத்தினால் கால தாமதம் ஆன நிலையில், இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், மேலும் அவகாசம் நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு நான் பதிலளிக்க முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.


தற்போது வரை 5,529 பதவிகளுக்கு 9,10,644 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இனியும் அவகாசத்தை நீட்டித்தால் தவறுக்கு வழிவகுத்துவிடும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )