தலைப்பு செய்திகள்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 10 பேர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 10 பேர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
வவுனியாவில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 தமிழர்கள் தனுஷ்கோடி அருகே கம்பிபாடு பகுதியில் தஞ்சமடைந்தனர். அவர்களை மரைன் காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்களில் 6 சிறார்கள் தவிர 4 பேர் மீது, சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்தது, முறையான ஆவணங்கள் இன்றி வந்தது என 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அவர்களை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அடைக்க ஆணை தயாராகி வருவதாக மரைன் காவல்துறையினர் கூறியதால், அவர்களின் சிறைக்காவல் தேதியை அறிவிக்காமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின் பேரில், அந்த பத்து பேர் மட்டும் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழர்கள் அங்கிருந்து தமிழ்நாடு வரத் தொடங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.