தலைப்பு செய்திகள்
பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை.
பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மைனிங் கொள்கை உருவாக்கப்படும் என்றும் கூறினார். ரூ.1000 கோடியில் அரசு கல்லூரிகள் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.