தலைப்பு செய்திகள்
மார்ச் 28,29ல் பணிக்கு வராதவங்களுக்கு சம்பளம் கிடையாது!! இறையன்பு எச்சரிக்கை!!

மார்ச் 28, 29ம் தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உட்பட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சுமார் 25 கோடி மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நடப்பாண்டில் மேலும் அதிகமானோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மார்ச் 28,29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார். அத்துடன் பணிக்கு வந்தோர், வராதவர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது., போக்குவரத்து, மின்வாரியத்துறை ஊழியர்கள் மார்ச் 28,29 களில் தேதி கட்டாயம் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
