BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆம்புலன்ஸ் தர மறுப்பு: மகளின் உடலை 10 கிமீ தூரம் சுமந்து சென்ற தந்தை.

சத்தீஸ்கரில் நடந்த சோகம்.
ஆம்புலன்ஸ் தர மறுப்பு: மகளின் உடலை 10 கிமீ தூரம் சுமந்து சென்ற தந்தை

சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையில் இறந்த மகளின் உடலை 10 கிமீ தூரம் தந்தை தோளிலேயே சுமந்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா. சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமி சுரேகாவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார் ஈஸ்வர் தாஸ். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேகா உயிரிழந்தார். இதையடுத்து, மகளின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் ஈஸ்வர் தாஸ் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள், மற்றொரு சடலம் வந்தவுடன், இரண்டு சடலத்தைச் சேர்த்து ஒரே வண்டியில் எடுத்து சென்று விடலாம் என கூறியுள்ளனர். இதனால் சில மணி நேரம் காத்திருத்தும், ஊழியர்கள் முடிவை மாற்றிக் கொள்ளாததால், உயிரிழந்த தனது மகளின் உடலை தோளிலேயே சுமந்து 10 கிமீ தூரம் நடந்தே சென்று கிராமத்திற்கு சென்றுள்ளார்

இதைப்பார்த்த சாலையில் இருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )