தலைப்பு செய்திகள்
பழனி 1வது வார்டு பகுதியில் அதிமுக திமுக சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றாகக்கூடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி 1வது வார்டு பகுதியில் பாஜக சார்பாக ராமச்சந்திரன் என்பவர் பாஜக வேட்பாளராக வலம் வரும் நிலையில் வாக்குச் சாவடி மையப்பகுதிக்குள் பாஜக வேட்பாளரின் மனைவி சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நிலையில் அதிமுக திமுக சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றாகக்கூடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாஜகவின் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். இதனால் பாஜக கட்சி தொண்டர்களுக்கும் மற்ற கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Uncategorized