BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – இபிஎஸ் திட்டவட்டம்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரிவர நடைபெறவில்லை எனில் சிபிஐ விசாரணை கோருவோம்.

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா போல் இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு சென்றதை அப்போது மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்” என்று பேசினார். விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரிவர நடைபெறவில்லை எனில் சிபிஐ விசாரணை கோருவோம் என்றும் கூறினார்.


மேலும், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தனிப்பட்டது என்றும், தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறிய இபிஎஸ், சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது என்றும் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )