தலைப்பு செய்திகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்து அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கு 100 மீட்டர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சிவராசு காஜாமலையில் உள்ள மானிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில் 7மணிக்கு திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது, 8 மணிக்குத் தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளறுபடி போன்ற நிலவரம் தெரியவரும். 157 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மைக்ரோ அப்சர்வர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக 17 புகார்கள் வரப்பெற்று, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர போலீசார் இதுகுறித்து புலன் விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.