தலைப்பு செய்திகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படுகிறது – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு கிராப்பட்டியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தாயாருடன் சென்று வாக்களித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யமொழி
மக்கள் பல்வேறு எதிர்பார்புகளுடன் வாக்களித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும்.
தேர்தல் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு தான்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது. அதே போல தான் இந்த தேர்தலும் நேர்மையாக நடத்தப்பட்டது.
ஒரு சில இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினரே களமிறங்கியுள்ளனர். அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களால் திமுக வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படாது.
மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கான ஆதரவு அலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.