BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

‘இதற்கு மேலும் இந்தியா தாங்குமா?’

அமித் ஷாவை கவிதையில் சாடிய வைரமுத்து.
'இதற்கு மேலும் இந்தியா தாங்குமா?'
இந்தி மொழியை திணிக்க முயலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. “மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்திதான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும்” என்று அவர் பேசிய பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்குப் பதில் கூறும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில்,

வடக்கே வாழப்போன தமிழர்

இந்தி கற்கலாம்

தெற்கே வாழவரும் வடவர்

தமிழ் கற்கலாம்

மொழி என்பது

தேவை சார்ந்ததே தவிர

திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்

நாங்கள் இழந்த நிலவியலும்

வாழ்வியலும் அதிகம்

இதற்கு மேலும் இந்தியா?

தாங்குமா இந்தியா?

என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )