BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

400ஆண்டுகள் பழைமை வாய்ந்த அண்ணா சாலையில் மூன்று மேம்பாலம்!

 

சென்னை,ஏப்.14:
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. காலை மற்றும் மாலை வேளையில் அனைத்து சாலை சந்திப்புகளிலும், வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

நந்தனம் சந்திப்பு, CIT நகர் சந்திப்பு ஆகியவற்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு வானங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகானும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் SIET கல்லூரி சாலை சந்திப்பு. செனடப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமைச் சாலை வழிச்சாலை வெங்கட்நாராயணச் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் நந்தனம் சந்திப்பு.

தி.நகர் நிலையம், உஸ்மான் சாலைகளை இணைக்கும் CIT நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதானச் சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிவற்றை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த பாலம் 20 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூபாய் 485 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )