BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பீஸ்ட்  திரைப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறது.

விஜய்யின் 'பீஸ்ட்' - திரை விமர்சனம் - நெல்சனுக்கு என்னாச்சு?- Dinamani

தடை செய்ய முதல்வருக்கு தமுமுக கோரிக்கை.
“நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும், அமைதியின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம்.

வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. அதேநேரம், அதை குழைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ
மேலும், ” திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன. ‘விஸ்வரூபம்’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன. முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் கட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது. குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும், அமைதியின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )