தலைப்பு செய்திகள்
ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு என்ற தமிழக முதல்வரின் இலக்கை உறுதி செய்யும் வகையில் இன்று ஒரு லட்சம் இணைப்புகளுக்கான தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆணை வழங்கப்பட்டது.

ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு என்ற தமிழக முதல்வரின் இலக்கை உறுதி செய்யும் வகையில் இன்று ஒரு லட்சம் இணைப்புகளுக்கான தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆணை வழங்கப்பட்டது.. அதன் காணொளி காட்சி வழியாக பல்வேறு மாவட்ட விவசாயிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் வேலூர் மாவட்ட மின் பகிர்மான அலுவலகத்தின் சார்பாக விஐடியில் நடைபெற்றது.. அதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கலந்துகொண்டு 3286 விவசாய பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார். உடன் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்களை வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பயனாளிகள் கலந்து கொண்டு மின் இணைப்பு சான்றுகளைப் பெற்றுச் சென்றனர். அதில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மின்னிணைப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மனு அளித்த குறுகிய காலத்திற்குள் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும் அதைச் செயல்படுத்திய மின் பகிர்மான மின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
