தலைப்பு செய்திகள்
7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் !!
தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை (பிப்.22) வரையிலான மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் குடைகளை பிடித்தவாறு வாக்களிக்க சென்றனர். இந்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி) ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை(பிப்.22) வரையிலான மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப்.23: தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.