BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கேரளா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் எச்.ராஜாவும் ஒருவர். கடந்த 2001-ம் ஆண்டு காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.ராஜா, அதன் பின் நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஐந்து முறை நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். தமிழக சாரண – சாரணியர் படைத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார்.

பாஜகவின் தேசிய செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள எச்.ராஜா அதிரடியாக பேசக்கூடியவர். நீதிமன்றம் சம்பந்தமாக அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தமிழக பாஜக தலைவர்களாக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )