BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சன்னி லியோனிடம் 2 ஆயிரம் திருட்டு

சென்னை: கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சன்னி லியோன். தற்போது மும்பையில் தங்கியிருந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். தற்போது ஜீரோ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.

அவரது வங்கிக் கணக்கில் இருந்து மர்ம ஆசாமி ஒருவர், 2 ஆயிரம் ரூபாய் திருடி இருக்கிறார். இதுகுறித்து சன்னி லியோன் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:‘சில முட்டாள்கள் எனது பான் கார்டு எண்ணை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். எனக்கு பணம் அளித்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தும் எனக்கு உதவவில்லை. இது ஏன் என்று எனக்கு புரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், 2 ஆயிரம் ரூபாயை கடன் என்கிற பெயரில் திருடி யவரை வலைவீசி தேடி வருகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )