BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொண்டு வரப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் தற்போது அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு வந்தனர்.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக குறைந்த செலவில் பல மருத்துவ பரிசோதனைகள் இதன் மூலம் செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு, அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்ற திட்டத்தின் பெயரை அதிநவீன உடல் பரிசோதனை திட்டம் என பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மா பெயரிலான திட்டங்களை முடக்குவது அல்லது பெயர் மாற்றம் செய்வதை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள். முழு பௌர்ணமி நிலவாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் பிரகாசிக்கும் அம்மாவின் புகழை இப்படியான அற்பமான செயல்களால் மறைத்துவிட முடியாது என்பதை திமுக அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )