தலைப்பு செய்திகள்
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளும்போது, லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளும்போது, லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.இளம்பெண்ணை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது இளைஞனின் முன் ஜாமீன் மனுவினை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் நீதிபதி தள்ளுபடி செய்தார். பின்னர் அவர் வழங்கிய உத்தரவில், சமீபத்திய காலங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளும்போது, லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று கூறினார்.
இந்த உறவு முறை இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கவும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கவும் செய்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 21ன் படி வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதனை பயன்படுத்திக்கொள்ளும் இந்த உறவுமுறை பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கிறது என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதுப்போன்ற உறவில் இருக்க விரும்புகிறவர்கள், அதற்கான வரம்பு முறைகள் எதையும் அறியாதவர்களாக இருக்கின்றனர். இத்தகைய வாழ்க்கை துணையர்களுக்கு எந்தவகை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்று நீதிபதி கூறினார். கண்ணியம், தனியுரிமை உள்ளிட்ட பல விஷயங்களை காப்பதற்கு நீதிமன்றம் பல ஆண்டுகளாக தனது வரம்பை விரிவுபடுத்தி கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.
புகார் அளித்த பெண் இரண்டு முறைக்கு மேல் கர்ப்பமாகிவிட்டதாகவும், குற்றச்சாட்டப்பட்டவரின் அழுத்தத்தின் கீழ் கருவைக் கலைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இருவரின் உறவு முறிந்தபோது, அந்தப் பெண் வேறு ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணுடன் வாழந்தவர் அந்த பெண்ணை அச்சுறுத்தி மிரட்டல் விடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் என நீதிபதி கூறினார்.
மேலும் அந்த பெண்ணின் தாயாருக்கு வீடியோ மூலம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் ரத்தாகியுள்ளது என்று நீதிபதி மேற்கோள் காட்டி பேசினார்.
அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை பயன்படுத்தி, லிவ்-இன் உறவினால் பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.