தலைப்பு செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்: வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு145 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் ஆசிரியர் பணி என்ற உன்னதமான துறையை தேர்ந்தெடுத்த நீங்கள்,
வருங்கால இந்தியாவின் இளைஞர்கள் உங்கள் கையில் ஒப்படைக்க படுகிறது.
அவர்களைப் பேணிக் காப்பதும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்குவதிலும், புதிய தலைவர்களை உருவாக்க வேண்டிய கடமையும் உங்களிடம் இருக்கிறது என்று கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
