தலைப்பு செய்திகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத் தொடக்க விழா!
வேலூர் மாவட்டம் அடுத்த கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, பனமடங்கி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் தொடக்க விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மருத்துவ துணை இயக்குநர், ஒன்றிய குழுத்தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பாரதி வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் சீதாராமன், ஜெயா முருகேசன், மு.ஒன்றிய கழக செயலாளர்கள் தயாளமூர்த்தி, ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிமன்ற குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சிமன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள் நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
