BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நீட் முதுகலை தேர்வு: மத்திய அமைச்சருக்கு 2 பிரச்சினையை சுட்டிக்காட்டும் சு.வெங்கடேசன்.

நீட் முதுகலை தேர்வு: மத்திய அமைச்சருக்கு 2 பிரச்சினையை சுட்டிக்காட்டும் சு.வெங்கடேசன்

2022க்கான நீட் முதுகலை தேர்வு தொடர்பாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் இரண்டு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், “எதிர்வரும் மே 3 அன்று வரை 2021 நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மே 23ல் 2022ல் நீட் முதுகலை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதில் இரண்டு பிரச்சினைகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒன்று, கோவிட் காரணமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் பயிற்சிக் காலம் பல மாநிலங்களில் தாமதம் ஆகியுள்ளது. ஆகவே, அவர்கள் 2022 நீட் தேர்வின் பங்கு பெற இயலாத நிலை உள்ளது. ஓராண்டு வீணாகிற நிலைமை ஏற்பட்டது. இரண்டாவது, நீட் முதுகலை அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு மற்றும் 2022 நீட் முதுகலை தேர்வுகள் இரண்டிற்குமான கால இடைவெளி மிகக் குறுகியதாக உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு தேதிகளும் அடுத்ததாக வரும். கால இடைவெளி குறைவாக இருப்பது நடு மட்ட தர வரிசை மாணவர்களை முடிவெடுப்பதில் குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாவது தேர்வுக்கான தயாரிப்பிற்கு கால அவகாசமும் போதாது.

ஆகவே தேர்வுத் தகுதி பெறாத பயிற்சி மருத்துவர்கள் பிரச்சினைக்கும், உரிய கால இடைவெளியின்றி தேர்வுகள் நடத்தப்படுகிற நிலையைத் தவிர்க்கவும் கோரியுள்ளேன். நல்ல பதில் வருமென எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )