BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்  || Tamil news Anbumani Ramadoss says Action should be taken against  Bharathi Dasan University

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். இவரிடம் முன்னணி நிறுவனம் ஒன்று தங்களின் புகையிலை விளம்பரத்தில் நடிக்க கோரிக்கை வைத்தது. அதற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக அல்லு அர்ஜுனிடம் கூறியது. ஆனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் . அத்துடன் அதில்தான் நடித்தால் தனது ரசிகர்களை தானே தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வது போல் ஆகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

allu arjun | Latest allu arjun News, Videos, Photos - Cinemapettai

இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ட்விட்டரில், “புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )