BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு” - வீரர்களுக்கு  நம்பிக்கையூட்டிய மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்” என விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது” என்றும், “ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )