BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

தமிழ்த் துறை மீட்டுருவாக்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்: நன்கொடை வழங்கிய நடிகை ராதிகா

பிரிட்டன் தமிழ்த் துறை பெண்கள் குழு சார்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19-ல் கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக ராதிகா கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.

பின்னர், ஏப்ரல் 23-ல் தமிழ்த் துறை குழுவினருடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த ராதிகா, நன்கொடைக்கான காசோலையைத் தமிழ்த் துறை குழுவினருக்கு வழங்கினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர்கள் www.tamilstudiesuk.org என்ற தளத்தில் சென்று வழங்கலாம்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )