தலைப்பு செய்திகள்
நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை 8.70 கோடி மதிப்பீட்டில் துவக்கம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை காவேரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 862.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 8.70 கோடி மதிப்பீடு மதிப்பீட்டில் 49 பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி பாலூர் பகுதியில் சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது.

மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சிறப்பு தூர் வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி ஏரதாள 49 பணிகள், 849 கி.மீ தூரத்திற்கு உள்ள வாய்க்கால்கள் தூர் வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8.70 கோடி செலவில் தூர் வாரும் பணிகள் ஆரம்பிக்கப்போகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த வருடம் மே இரண்டாம் வாரத்தில் இவ்வேலைகள் நடந்தது. மாண்புமிகு முதலமைச்சிரன் அவர்களின் ஆணைக்கிணங்க இவ்வாண்டு ஏப்ரல் மாத கடைசியில் துவங்கி விவசாயிகளின் பலன்களுக்காக அவர்களின் கருத்து கேட்புகளுக்குக்கிணங்க காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இங்கு வருவதற்க்குள் இங்குள்ள எல்லா வாய்க்கால்களும் தூர்வாரப்படும் என்று ஆணையிட்டதற்கிணங்க, இதற்கான மதிப்பீடுகள் தயாரித்து இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த வேலை ஜூன் முதல் வாரத்திலேயே முடிந்துவிடும். ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து இங்கு வருவதற்கு ஏரத்தாள 20-ம் தேதி ஆகும் அதற்கு முன்கூட்டியே 49 வேலைகளும் முடிக்கப்படும். இதற்காக சிறப்பாக 70 இயந்திரங்கள் இரண்டு ஷிப்டாக ஏற்பாடு செய்து அதற்கு முன்னதாகவே முடிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமில்லாமல் விவசாயிகள் கருத்துக்கள் கேட்டு இன்னும் ஒரு சில பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது மட்டுமில்லாமல் ஊரகத்துறை மூலமாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து 800கி.மீ உண்டான கால்வாய்கள் தூர் வார நடவடிக்கை எடுத்துள்ளோம். அதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்முடிக்கலாம்.

இந்த வருடம் காவேரியிலிருந்து தண்ணீர் வருவதற்க்குள் கடைமடை வரைக்கும் வருவதற்க்கு அனைத்து வாய்க்கால்களும் எடுத்து கொண்டு உள்ளோம். சென்ற ஆண்டு தூர் வார எடுக்கப்பட்ட பணிகள் ஏதுவும் இவ்வாண்டு எடுக்கப்படவில்லை. மேலும், 49 பணிகளை கண்காணித்திட 49 வேளாண்மை உழவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சமந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் இப்பணிகள் சரியான முறையில் பணிகள் நடைபெறுகிறதா குறித்த ஆழத்திற்க்கும் அகலத்திற்க்கும் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றதா என்பதை கண்காணிப்பார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) வே.சண்முகம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல்மாலிக், செம்பனார்கோயில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, இணை இயக்குநர் வேளாண்மைத் துறை சேகர், உதவி பொறியாளர் விவேகானந்தன், விஜயபாஸ்கரன், வீரப்பன், எடுத்துக்கட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பைலட், திருக்களாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் சம்சாத்ரபிக், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
