தலைப்பு செய்திகள்
வாழ்த்துக்கள் மாணவர்களே! இன்று 11,12ம் வகுப்புக்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்!
வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே… இத்தனை காலங்களாக இந்த கொரோனா ஊரடங்கு, ஆன்லைன் கல்வி, தேர்தல் அரசியல் என்று பல விஷயங்கள் உங்களை திசை திருப்பி இருக்கலாம். இன்று செய்முறை தேர்வு துவங்குகிறது. உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற கல்விக்கு இனி மேலாகிலும் முக்கியத்துவம் கொடுங்கள். தமிழகத்தில் பிப்ரவரி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.அதன்படி தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதியும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதியும் தொடங்க உள்ளது.
இந்த வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை ஏப்ரல் 25 முதல் தொடங்குகிறது.
இந்த தேர்வுகள் இன்று ஏப்ரல் 25ம் தேதி முதல் கட்டமாகவும், ஏப்ரல் 28 முதல் மே 2ம் தேதி வரை 2ம் கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. உயிரியல், வேதியியல், இயற்பியல் தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடத்தப்பட்டன. இந்த கல்வியாண்டு முதல் செய்முறை தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த செய்முறை தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண்கள் 30. அதில் 20 மதிப்பெண்களுக்கு செய்முறை. 10 மதிப்பெண்கள் அகமதீப்பீடு. 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு நடத்தப்படுவதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.