தலைப்பு செய்திகள்
எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சூரியகாந்தி, பாமாயில், இன்று டால்டா உள்பட பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் விற்பனை பெருமளவில் குறைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தன. தற்போது சமையல் எண்ணெய்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சூரியகாந்தி, பாமாயில், டால்டா போன்ற சமையல் எண்ணெய்கள் கடந்த வாரங்களாக லிட்டருக்கு ரூ10 முதல் ரூ15 வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய விற்பனை அங்காடியில் உள்ள கடைகளில் இன்று காலை ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ185க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை கடைகளில் ரூ200 வரை அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்ற பாமாயில் இன்று ரூ195க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சூரியகாந்தி எண்ணெயை பொறுத்தவரை உள்நாட்டில் நுகர்வோரின் பங்கு 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதன் இறக்குமதியிலும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் இன்று சூரியகாந்தி எண்ணெய் ரூ5 ரூபாய் கூடுதலாகவும், பாமாயில் ரூ15, டால்டா ரூ10 என கூடுதல் விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடைகளில் எண்ணெய் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.