BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேர விசாரணை செய்யக்கூடாது” என்று அனைத்து மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Sylenthra Babu appointed new DGP of Tamil Nadu || தமிழகத்தின் புதிய  டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் கைது விசாரிக்கப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 3 காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல் துறை விசாரித்து வருகிறது. இப்படி தொடர்ந்து லாக்அப் மரணம் நிகழ்ந்து வரும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்.

அதில், “விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் (Night custody) எனப்படும் இரவு விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )