BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து.

மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்து பெரும் பரபரப்பு நிலவியது.

இன்று காலை 7 மணியளவில் மும்பை சாண்டாகுரூஸில் இயங்கி வரும் 2 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதால் அலுவலர்கள் யாரும் பணியில் இருக்கவில்லை. இதனால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் ஆவணங்கள், கோப்புகள் போன்றவை எரிந்து நாசமாகியுள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, ‘‘எலக்ட்ரிக் வயரிங், கம்ப்யூட்டர், கோப்புகள், மரசாமான்களில் தீ பற்றியுள்ளது. இது வரை எந்த காயங்கேளா, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை’’ என தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தங்களது காப்பீட்டு ஆவணங்கள் என்னவாகி இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )