BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பொது மக்கள் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை அடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மாநிலம் முழுதும் அதிரடி சோதனைகளை நடத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில், ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை நடத்த, உணவு பாதுகாப்புத் துறையினர் முடிவு செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )