BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒரு மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில், வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டம், பெரியகங்கணாங்குப்பம், அருள்மிகு சேமகளத்து மாரியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம், அருள்மிகு அருந்தபசு அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடி, அருள்மிகு சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில், கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம், அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருள்மிகு ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களுக்கு 13.05.2022 அன்றும், விருதுநகர் மாவட்டம், குன்னூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு நகர், அருள்மிகு கம்மாள கருப்பசாமி திருக்கோயில்,

காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகிய திருக்கோயிலுக்கு 15.05.2022 அன்றும், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு 27.05.2022 அன்றும், புதுக்கோட்டை மாவட்டம், அருள்மிகு ஆதிமத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயிலுக்கு 09.06.2022 அன்றும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாதமும் திருப்பணிகள் முடிவுற்ற திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு உடனடியாக நடந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )