BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் கரோனா குறைந்து வருகிறது.

இந்தியாவில் கிடுகிடுவென கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 206 பேர் உயிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் நேற்று 19, 968 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,051 ஆயிரமாக குறைந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 38 ஆயிரத்து 524 ஆக உயர்ந்தது. கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 131 ஆக குறைந்தது.

நேற்று ஒரு நாளில் கரோனா தொற்றில் இருந்து 37 ஆயிரத்து 901 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 325 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 206 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் இதுவரை 1,75,46,25,710 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 81 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )