தலைப்பு செய்திகள்
தேச துரோக வழக்கு பதியக் கூடாது!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மத்திய அரசு தேச துரோக வழக்கு குறித்த சட்டப்பிரிவை மறு பரீசலனை செய்யும் வரை அதுதொடர்பான வழக்கு எதையும் பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய சுதந்திரப் போராட்டத்தை அடக்குவதற்காகன தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு ஆங்கிலேயர்களாக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போதும் இந்த சட்டப்பிரிவு அமலில் இருக்கிறது. இந்த தேச துரோக சட்டப்பிரிவை, பழிவாங்கும் நோக்கம் மற்றும் அரசியல் காரணத்திற்காக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் தொடுத்த பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த பொது நல வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம், மத்திய அரசிடம் ஆலோசனைக் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, தேச துரோக சட்டப்பிரிவை நீக்கவும், அல்லது அந்த சட்டப்பிரிவில் திருத்தங்கள் செய்யவும் உள்ளதாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், 34 வாரங்களுக்குள் இந்த மறுபரிசீலனை பணிகளை முடித்துவிட வேண்டும் என்று காலகெடு விதித்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு 124ஏ -வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தற்காலிகமாக தேச துரோக வழக்குகள் எதையும் மத்திய அரசு பதியக்கூடாது’’ என்று கூறியுள்ளது.இதனால் மத்திய அரசு துரிதமாக தேச துரோக வழக்கு சட்டப்பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
