BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை திருவேள்விகுடி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் நவீன அரிசி ஆலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மயிலாடுதுறை அருகே திருவேள்விகுடி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் நவீன அரிசி ஆலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவேள்விக்குடியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடலங்குடி பகுதியில் இடமாற்றம் செய்ததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்த அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆலையின் வாயிலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு முற்றுகையிட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து விவசாயிகள் நவீன அரிசி ஆலை முன்பு அமர்ந்து நெல் கொள்முதல் நிலையத்தை பழைய இடத்திற்கு மாற்றக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை ஆர்டிஓ பாலாஜி மற்றும் டிஎஸ்பி வசந்த ராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே அடுத்த சம்பா பருவத்தில் திருவேள்விக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றும்., அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு அருகிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )