BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேரூராட்சிகள் பதிவான வாக்குகள் ஏழு மையங்களில் எண்ணப்படுகிறது.

தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் எண்ணப்படுகிறது. இங்கு 12 மேசைகளில் 5 சுற்றாக 196 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

இதேபோல் கும்பகோணம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் குடந்தை அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுகிறது. இங்கு 5 சுற்றுகள் 14 மேஜைகளில் எண்ணப்படுகிறது.

இதேபோல் பட்டுக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 மேஜைகளில் 6 சுற்றுகளாக 66 இயந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

இதேபோல் அதிராம்பட்டினம் நகராட்சியில் 10 மேஜைகளில் 4 சுற்றுகளாக 33 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எண்ணப்படுகிறது.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )