தலைப்பு செய்திகள்
நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
மாநிலங்களின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் வரிசைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இதில், நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில், இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.மேலும், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கல்வி என அனைத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் நிதி ஆயோக் கூறியுள்ளது.
CATEGORIES Uncategorized