தலைப்பு செய்திகள்
திமுக வசமாகிறது கரூர், திண்டுக்கல், சிவகாசி, நெல்லை.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திண்டுக்கல், கரூர், நெல்லை, சிவகாசி மாநகராட்சிகளில் பெரும்பான்மையைத் தாண்டி முன்னிலை நிலவரம் செல்வதால் இங்கெல்லாம் மாநகராட்சிகள் திமுக வசமாகின்றன. நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
12.55 PM: திருச்சி மாநகராட்சியும் திமுக வசமாகிறது. 65 வார்டுகளில் 35 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
12.48 PM: திமுக வசமானது நாகர்கோவில் மாநகராட்சி:
நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)
வெற்றி விவரம்:
திமுக கூட்டணி- 26
அதிமுக- 3
பாஜக- 7
சுயேச்சை-1
வார்டுகள்.
1 வது வார்டு – தங்கராஜா, திமுக
2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.
3 வது வார்டு – அருள் சபிதா, காங்கிரஸ்.
4வது வார்டு – மகேஷ், திமுக.
5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.
6 வது வார்டு – அனுஷா பிரைட், காங்கிரஸ்.
7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக
8 வது வார்டு – சேகர், அதிமுக
9 வது வார்டு – ராமகிருஷ்ணன், திமுக.
10 வது வார்டு – வளர்மதி, திமுக
11 வது வார்டு – ஸ்ரீ லிஜா, அதிமுக
12 வது வார்டு – சுனில் , பா.ஜ.க.,
13 வது வார்டு – ஆச்சியம்மா, பி.ஜே.பி.,
14 வது வார்டு – கலாராணி, திமுக.,
15 வது வார்டு – லீலாபாய், திமுக.,
16 வது வார்டு – ஜவஹர், திமுக.,
17 வது வார்டு – செல்வி கௌசுகி, திமுக
18 – வது வார்டு – அமல செல்வன், திமுக.,
19 வது வார்டு – மோனிகா, திமுக
20 வது வார்டு – ஆனேறோனைட்சினைடா, பா.ஜ.க.,
21 வது வார்டு -ஜோனா கிறிஸ்டி ,திமுக
22 வது வார்டு – பால் தேவராஜ் அகியா, காங்கிரஸ்
23 வது வார்டு – , திமுக
24 வது வார்டு , – ரோஸிட்டா , பா.ஜ.க.,
28 வது வார்டு – அனந்த லட்சுமி, திமுக
29 வது வார்டு – மீனா தேவ், பி.ஜே.பி.,
30- வது வார்டு – சந்தியா, காங்கிரஸ்
31 வது வார்டு – சோபி, திமுக
32- வது வார்டு – சிஜி, காங்கிரஸ்
33- வது வார்டு – மேரி பிரன்ஸி லதா, திமுக
34 -வது வார்டு – தினகரன், பா.ஜ.க.,
35 வது வார்டு – ராணி, சுயேட்சை
36 வது வார்டு – ரமேஷ், பா.ஜ.க.,
37 வது வார்டு – செல்வலிங்கம் அலைஸ் செல்வம், அதிமுக
38- வது வார்டு – சுரேஷ், திமுக
39- வது வார்டு – பாத்திமா ரிஸ்வானா, திமுக.,
40 வது வார்டு – கோகிலா , திமுக
12.44 PM: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் அதிமுக வெறும் 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 50 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
12.23 PM: தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் என கருதப்படும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி 20வது வார்டில் வெற்றி
12.30 PM: கரூர் மாநகராட்சியில் 23 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலா 2 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது, சுயேச்சை 1 வார்டிலும், காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 பேர் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கரூர் மாநகராட்சி திமுக வசமாகிறது
12.20 PM: சேலம் மாநகராட்சி 15வது வார்டில் திமுக வேட்பாளர் உமாராணி 2205 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 55 வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி 3327 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 24வது வார்டில் அதிமுக வேட்பாளர் சந்திரா கிருபாகரன் 1181 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
12.10 PM: சிவகாசி மாநகராட்சியில் திமுக முன்னிலை: மொத்த வார்டுகள்: 48. இவற்றில் திமுக- 14, காங்கிரஸ்- 1 இடத்தைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. அதிமுக- 11 இடத்தையும், சுயேச்சை 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
12.00 PM: மதுரை மாநகராட்சி 1 2 3 4 5 6 14 15 16 25 36 37 38 43 44 46 56 71 70 74 78 79 84 51 54 அகிய முப்பது வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
11.45 AM: திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை அறிவித்துள்ள தேர்தல் முடிவுகளின்படி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இம்மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 17 வார்டுகளில் திமுக 13 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
11.35 AM: சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி பெற்றுள்ளார். 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.
11.30 AM: மதுரை மாநகராட்சி் மொத்த வார்டுகள் : 100 முடிவு அறிவிக்கப்பட்ட வார்டுகள் : 30
வெற்றி நிலவரம் :
திமுக – 17
அதிமுக – 5
சிபிஎம்-2
காங் – 2
விசிக – 1
மதிமுக -2
பாஜக -1