BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

எடப்பாடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி நகராட்சியினை கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் திமுக அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளது. எடப்பாடி நகராட்சியில் திமுக 16, அதிமுக 13, காங்கிரஸ் 1 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடனும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றன. எடப்பாடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி நகராட்சியினை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )