தலைப்பு செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
புதிய மேயர் யார்?
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது நாகர்கோவில் மாநகராட்சிக்கு பதிவான ஓட்டுகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்பட்டன ஆரம்பம் முதலே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று அதிக வார்டுகளை கைப்பற்றினர். நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி மொத்தம் 32 இடங்களை பிடித்து மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது நாகர்கோவில் மாநகராட்சியான பின்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது திமுக 24 வார்டுகளிலும் காங்கிரஸ் 7 வார்டுகளிலும் மதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது பாஜக 11 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர்களும் வெற்றி பெற்றுள்ளனர் ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நாகர்கோவில் நகரசபையை கைப்பற்றியது.