தலைப்பு செய்திகள்
வாணியம்பாடியில் அடுத்தடுத்து சுயேச்சை வேட்பாளர்கள் தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு பகுதியில் நியமதுல்லா,முஹம்மது சபில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போட்டியில் இருந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கடும் போட்டி நிலவி வந்தது.
இதில் நியமதுல்லா வெற்றி பெற்றதால் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல சென்றுள்ளார் அப்போது முகமது சபீல் வீட்டின் அருகே பட்டாசு வெடித்ததால் வயது முதிர்ந்த சிலர் இங்கு உள்ளதாகவும் இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டுள்ளனர்.மேலும் முகமது சபீல் வீட்டில்.இருந்த பொருட்களை நியமதுல்லா தரப்பினர் சூறையடியதாக கூறப்படுகிறது
அதில் சபீல் மற்றும் அவர்களுடைய உறவினர் துபேல் மற்றும் அவருடைய நண்பர் ராஜேஷ் ஆகிய 2 பேர் பலத்த காயங்களுடன் வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விரைந்து சென்ற காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் 23 வார்டு பகுதியில் பஷீர் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அவருடைய அலுவலகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருந்தபோது மற்றொரு வேட்பாளரின் உறவினர் ஒருவர் வெற்றி பெற்ற பஷீர் அலுவலகத்திற்கு வந்து அவதூறாக பேசியுள்ளார்.
இதனால் பஷீர் ஆதரவாளர்களுக்கு அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்னர் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு குவிந்திருந்த மக்களைக் கலைந்து செல்லும்படி கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கபட்ட அன்றே வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியடைந்தவர்களும் ஒருவரை தாக்கி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.